தமிழ் நிகழ்த்துகைகள்

தமிழ்க் கணிமையும் தமிழ் விக்கிப்பீடியாவும்
பல்வகைத் தேவைகளுக்கு தமிழில் கணினியைப் பயன்படுத்துவதை, பயன்படுத்த உதவும் தொழில்நுட்பங்களை தமிழ்க் கணிமை எனலாம்.
தமிழ் விக்கியூடகங்கள்: கூட்டு மதிநுட்ப மாதிரி
கூட்டாக்கம் (Crowd-sourcing) என்பது பரந்துபட்ட மக்கள் வளங்களில் இருந்து உள்ளீடுகளைப் பெற்று, பெரும் திட்டங்களை சிறு சிறு பணிகளாக உடைத்து, சிறு சிறு பங்களிப்புகளை உள்வாங்கி, தேர்தெடுத்து செயற்திட்டத்தை நகர்த்துவதற்கான கட்டமைப்பு.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
“ஒவ்வொரு தனி மனிதரும் தனது கருத்தை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானது. அந்தச் சுதந்திரம் மனிதருக்கு தன்மதிப்பைத் தருகிறது. அந்த மனிதரின் கூற்றை, பங்களிப்பை சமூகம் பெற்றுக் கொள்ள இசைவு கொடுக்கிறது. இதனால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மனிதனின் பூரணத்துவத்துக்கு அடிப்படையான உரிமையாக பார்க்கப்படுகிறது.” – அமெரிக்க குடிசார் உரிமைகள் ஒன்றியம், மூலம்:
பண்பாட்டு மரபுரிமைகளை ஆவணப்படுத்தல்
ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் அவர்கள் ஒரு முன்னோடி தமிழ் ஆவணகக் காப்பகர் (Archivist) ஆவார். இவர் ஈழத்து வரலாற்று, அரசியல், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்த ஒரு பெரும் சேகரிப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாகா முன்னின்று முன்னெடுத்தார். ஆவணம், ஆவணப்படுத்தல், ஆவணகம் பற்றி போதிய விழிப்புணர்வு தமிழ்ச் சூழலில் இல்லாத ஒரு காலத்தில் இவர் இப் பணியை முன்னெடுத்து இருந்தார். மேலும், இவர் உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அங்கு போய் தகவல் சேகரித்தார், அவர்களைப் பற்றி நூற்களை வெளியிட்டார். இந்தச் சேகரிப்புகள் அடங்கிய ஆவணகமாக உலகத் தமிழர் ஆவணக் காப்பகத்தை தொடங்கினார். மேலும், இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவம் ஆவார். இவரது ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு கனடாவில் சனிக்கிழமை யூலை 8, 2017 அன்று ஸ்காபுரோ நகர மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பாக அருள்மொழிவர்மனும் நற்கீரனும் "பண்பாட்டு மரபுரிமைகளை ஆவணப்படுத்தல்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்தல் (presentation) வழங்கினார்கள்., மூலம்:
நூலகம்
மூலம்:
e-தக்சலாவ
e-தக்சலாவ - இலங்ககக் கல்வி அகைச்சின் தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கிழையின் e-கற்றல் மற்றும் நெனச பிரிவினரால் முன்னெடுக்கப்படும் கற்றல் தளம்., மூலம்: https://drive.google.com/file/d/1GHfR3wZnSzCcabVvz3Tb6jMe-gXt95SO/view