ஓவியங்கள் சேகரம்

Pages

பத்மநாப ஐயர்
மூலம்: https://www.facebook.com/photo.php?fbid=10153991584472869&set=a.10153765388202869.1073741870.610002868&type=3&theater
யாழ் கோட்டை
மு. கனகசபையால் வரையப்பட்ட யாழ் கோட்டை ஓவியம்
தீபாவின் ஓவியம் - நரி
தீபாவின் அக்கிரிலிக் ஓவியம் - நரி கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது, மூலம்: சந்திரவதனா
தீபாவின் ஓவியம் - Ballet
தீபாவின் ஓவியம் - Ballet, மூலம்: சந்திரவதனா
Refugee
மூலம்: Jeyandan Nadarjah
தாண்டவம்
அ. மாற்கு அவர்களால் வரையப்பட்ட தாண்டவம் எனும் ஓவியம்
வித்துவான் வேந்தனார் ஓவியம்
மூலம்: இளஞ்சேய் வேந்தனார்
வி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 18
வி.பி, வாசுகன் அவர்கள் வரைந்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் ஓவியம். கனகரத்தினம் சொர்ணலிங்கம் (1889 - 1982) ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர். நவீன நாடகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். கலையரசு சொர்ணலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படுபவர். கலையரசு சொர்ணலிங்கம் இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார். இந்த நாடக சபையின் தொடக்கவிழா 1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. சொர்ணலிங்கத்தின் நாடகங்களில் வைத்தியக் கலாநிதிகள், வழக்கறிஞர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றியுள்ளார்கள். யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தினார்
வி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 19
வி.பி, வாசுகன் அவர்களால் வரையப்பட்ட நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்களினோவியம். நடிகமணி வி. வி. வைரமுத்து (1924 - 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
வி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 21
வி.பி, வாசுகன் அவர்களால் வரையப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ஓவியம். பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்
வி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 22
வி.பி, வாசுகன் அவர்களால் வரையப்பட்ட குழந்தை சண்முகலிங்கம் அவர்களின் ஓவியம்.
வி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 20
வி.பி, வாசுகன் அவர்களால் வரையப்பட்ட வில்லியம் சேக்சுபியர் அவர்களின் ஓவியம். வில்லியம் சேக்சுபியர் (1564 - 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும்.

Pages