ஒலிச் சேகரம்

Pages

ப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை பொகவந்தலைவையைச் சேர்ந்த கவிஞர் ப. கனகேஸ்வரன் (கேஜி) அவர்கள் எழுதிய கள்ளச்சி, றப்பர் பாஞ்சாலிகள், விளம்பரம் ஒட்டாதீர், விரல் சூப்பி ஆகிய நான்கு கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவானது, 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம், கைதடி சாந்தி முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இலங்கையின் வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் செயலாளரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இந்த நூல்களை வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியிட்டுள்ளது.
தோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22
2017.01.22 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற விசுவானந்ததேவன் 1952-1986 நூலின் அறிமுக நிகழ்வின் ஒலிப்பதிவு. விசுவானந்த தேவன் இலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளரும் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய அமைப்புக்களைத் தொடங்கி வழிநடத்தியவருமாவார்.
சண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்
ச. முத்துலிங்கம் ஐயாவுடன் செ. கிரிசாந் உரையாடிய இந்த ஒலிப்பதிவு ஆவணப்படுத்தலுக்கான நேர்காணலாகப் பதிவுசெய்யப்படவில்லை. உரையாடலின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கம் ஐயா காலமாகிய நிலையில் இன்னொரு நேர்காணல் சாத்தியமாகாது என்பதால் இந்த உரையாடலை ஆவணப்படுத்துகிறோம்.
சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் நூல் அறிமுக வைபவ ஒலிப்பதிவு
2017-02-19 அன்று யாழ்ப்பாணம் திருமறைகலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற வி. ஜெகநாதன் எழுதிய “சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள்” நூல் அறிமுக நிகழ்வின் ஒலிப்பதிவு
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய விழாவில் ” சி. வை. தா. பற்றிய பதிவுகள் ஒரு மீள்நோக்கு” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட நினைவுப் பேருரை. ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.
அது எங்கட காலம் நூல் வெளியீடு
கானா பிரபா எழுதிய அது எங்கட காலம் என்ற அனுபவக் கட்டுரைத் தொகுதி நூலின் வெளியீட்டு நிகழ்வு 2017-02-12 அன்று இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நான் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் கவிதைத்தொகுதி வெளியீடு
2017-02-23 அன்று கரவெட்டிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற த. அஜந்தகுமார் எழுதிய நான் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் கவிதைத்தொகுத்யின் வெளியீட்டு விழாவின் ஒலிப்பதிவு. விழாத் தலைமை குப்பிளான் ஐ. சண்முகன்.
தெய்வ தரிசனம்
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - அனுராதா சிறிராம், மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து
தெய்வ தரிசனம்
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா, மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து
தெய்வ தரிசனம்
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - ரி. எல். மகாராஜன், மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து

Pages