ஒலிச் சேகரம்

Pages

ப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை பொகவந்தலைவையைச் சேர்ந்த கவிஞர் ப. கனகேஸ்வரன் (கேஜி) அவர்கள் எழுதிய கள்ளச்சி, றப்பர் பாஞ்சாலிகள், விளம்பரம் ஒட்டாதீர், விரல் சூப்பி ஆகிய நான்கு கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவானது, 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம், கைதடி சாந்தி முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இலங்கையின் வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் செயலாளரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இந்த நூல்களை வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியிட்டுள்ளது.
தோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22
2017.01.22 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற விசுவானந்ததேவன் 1952-1986 நூலின் அறிமுக நிகழ்வின் ஒலிப்பதிவு. விசுவானந்த தேவன் இலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளரும் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய அமைப்புக்களைத் தொடங்கி வழிநடத்தியவருமாவார்.
ஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி
ஜீவநதி இதழ் 100 (ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்) வெளியீட்டு நிகழ்வின்போது எழுத்தாளர் வெற்றிச் செல்வி ஜீவநதி பற்றியும் ஆவணப்படுத்தல் பற்றியும் வழங்கிய நேர்காணல். ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.
சித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு
2017-02-04 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடந்த் ஞானம் பாலச்சந்திரம் எழுதிய சித்திரக்கவித் திரட்டு நூலின் அரங்கேற்ற விழாவின் ஒலிப்பதிவு.
தைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)
சு. வில்வரத்தினத்தின் தைப்பாவாய் பாடல் அவரது குரலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களை நேர்காணல் செய்கிறார் கானா பிரபா.
சண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்
ச. முத்துலிங்கம் ஐயாவுடன் செ. கிரிசாந் உரையாடிய இந்த ஒலிப்பதிவு ஆவணப்படுத்தலுக்கான நேர்காணலாகப் பதிவுசெய்யப்படவில்லை. உரையாடலின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கம் ஐயா காலமாகிய நிலையில் இன்னொரு நேர்காணல் சாத்தியமாகாது என்பதால் இந்த உரையாடலை ஆவணப்படுத்துகிறோம்.
செங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)
செங்கை ஆழியான் (க. குணராசா) அவர்களைக் கானா பிரபா கண்ட நேர்காணலின் ஒலிப்பதிவு
நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்
Discussion on Documentation in a Post-War Context அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், மற்றும் இலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (P.E.A.R.L.) ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை சிவில் சமூக உபயோகத்திற்காக அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் தொகுத்து வழங்கும் கையேடான, “நிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்” மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் P.E.A.R.L. தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” ஆகியவற்றின் வெளியீட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றன. பேச்சாளர்கள்: கலாநிதி நிம்மி கௌரிநாதன் “போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்” மரியோ அருள்தாஸ் “நினைவுகூரலின் அரசியல்” சாலின் உதயராசா “நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும் முட்டுக்கட்டைகளும்” தலைமை: குமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை யாழ் பல்கலைக்கழகம் பேச்சாளர்கள் பற்றி: கலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூ யோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்" முன்னெடுப்பின் தாபகர்/ பணிப்பாளர். www.deviarchy.com மரியோ அருள்தாஸ் : P.E.A.R.L. இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர் சாலின் உதயராசா : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியுள்ள ஊடகவியலாளர். The Adayaalam Centre for Policy Research in collaboration with P.E.A.R.L. and the Forum on Contemporary Issues at the Department of Law (Jaffna University) warmly invite you to a discussion on "Documentation in the Post-War Context" featuring the release of: "Human Rights Documentation in a Transitional Justice Context" - a booklet prepared by Adayaalam Centre for Policy Research AND "Erasing the Past: Repression of Memorialization in the North-East" - a report prepared by P.E.A.R.L. SPEAKERS: Dr. Nimmi Gowrinathan “Reflecting diverse and marginalized experiences in documenting the war” Mario Arulthas “Politics of Memorialization” Shalin Uthayarasa “Challenges and obstacles in documenting memorialization” Moderated by: Kumaravadivel Guruparan, Head, Department of Law, UoJ SPEAKER BIOGRAPHIES: Dr. Nimmi Gowrinathan is a Visiting Professor at the Colin Powell School for Civic and Global Leadership at City College, a Senior Research Scholar at the University of California Berkeley's Center for Race & Gender. She is also the Founder/Director of the Politics of Sexual Violence Initiative. www.deviarchy.com Mr. Mario Arulthas is the Advocacy Director of People for Equality and Relief in Lanka (P.E.A.R.L.) Mr. Shalin is a journalist based in Jaffna who has reported extensively on human rights violations in the North-East over the past years. *Discussion will be conducted in Tamil*
ஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)
ஏ. சி. தாசீசியஸ் அவர்கள் இயல் விருது பெற்றதையொட்டி தமிழ்நாதம் இணையத்தளத்துக்காக கானா பிரபா கண்ட நேர்காணல்
கி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)
கி. பி. அரவிந்தனுடனான நேர்காணல்
Understanding Tamil diasporic and refugee life
அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) "தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled "Understanding diasporic and refugee life", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.
ஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)
நீலாவணனின் ஓ வண்டிக்காரா பாடல் சு. வில்வரத்தினத்தால் பாடப்படுகிறது.
கானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு (ஒலிப்பதிவு)
எழுத்தாளர் கே. டானியலின் கானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

Pages