ஒலிச் சேகரம்

உலகப் புத்தக நாள் 2018 நிகழ்வு (யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணப் பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 22.04.2018 ஞாயிறு மாலை 3 மணிக்கு நூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடந்த நிகழ்வின் ஒலிப்பதிவு. * தலைமை : அ. யேசுராசா * புத்தகத்தின் வழிப்படம்: ச. சத்தியதேவன் * எனக்குப் பிடித்த புத்தகங்கள் சில : குப்பிழான் ஐ. சண்முகன் * சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறி : தி. செல்வமனோகரன் * வ. அ. இராசரத்தினம் படைப்புலகம் : த. அஜந்தகுமார் * கி. ராஜநாராயணன் படைப்புலகம் : சோ. பத்மநாதன்
மக்கள் இலக்கிய வரிசையில் நிக்கோலாய் ஒஸ்ரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது
ஒக்ரோபர் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக (1917-2017) கலை இலக்கிய ஆய்வரங்குத் தொடர் 04. தேசிய கலை இலக்கியப் பேரவையினரின் நிகழ்ச்சி.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் (நினைவுக் கருத்தரங்கம்)
சமூகவெளி படிப்பு வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் விழுதுகளிலிருந்து வேர்களை நோக்கி என்ற கருத்தரங்கத் தொடரின் 29 ஆவது நிகழ்வாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) பற்றி நடைபெற்ற கருத்தரங்கம். 2019-01-06 ஞாயிற்றுக்கிழமை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.