ஒலிச் சேகரம்

கி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)
கி. பி. அரவிந்தனுடனான நேர்காணல்
Understanding Tamil diasporic and refugee life
அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) "தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled "Understanding diasporic and refugee life", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய விழாவில் ” சி. வை. தா. பற்றிய பதிவுகள் ஒரு மீள்நோக்கு” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட நினைவுப் பேருரை. ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.
ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நினைவுக்கான வெளிகளை சாத்தியப்படுத்தல்
"நினைவுகளைக் கையளித்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மூதறிஞர் அமரர் சிற்பி சரபணபவன் நினைவு நிகழ்வில் குமாரவடிவேல் குருபரன் ஆற்றிய நினைவுப் பேருரை, ஒலிப்பதிவு : பிரபாகர், நடராசா
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை இசை - ராஜ் வரிகள் - மூனாக்கானா குரல் - அட்றி மற்றும் ராஜ் தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்: