ஒலிச் சேகரம்

தி. செல்வமனோகரன் அவர்களின் 3 நூல்கள் வெளியீடு
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற திரு தி. செல்வமனோகரன் அவர்களின் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள். திரு சோ. பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியீட்டுரையை திரு தெ. மதுசூதனன் அவர்கள் நிகழ்த்தினார்கள். "காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்" என்ற நூல் பற்றி திரு சி. ரமணராஜாவும், “சொற்களால் அமையும் உலகு" என்ற நூல் பற்றி திரு இ. சு. முரளிதரன் அவர்களும், “தமிழில் மெய்யியல்" என்ற நூல் பற்றி திரு ச. முகுந்தன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள். தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஏற்புரையை, மூன்று நூல்களினதும் நூலாசிரியர் திரு தி. செல்வமனோகரன் அவர்கள் வழங்க, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது
சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் இரு நூல்களின் வெளியீட்டு விழா
தி. செல்வமனோகரன் பதிப்பித்த சிவசங்கர பண்டிதம், சிவஞான சித்தியார் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டுவிழா சவவித்தியாவிருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் சோ. பத்மநாதன் தலைமையில் 2017-02-10 அன்று நடைபெற்றது