ஒலிச் சேகரம்

சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் நினைவு ஆய்வரங்கு
சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக ஆய்வரங்கு 2016-10-15 அன்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வின் காலை அமர்வின் ஒலிப்பதிவு இதுவாகும். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டமும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் சி. கா. செந்திவேல் அவர்களும் சமகால சாதிய சமூகத்தில் நிலம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் அகிலன் கதிர்காமர் அவர்களும் உரையாற்றினர்.
ஒக்ரோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமும் இலங்கையில் அதன் தாக்கமும்
மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு ஆய்வரங்குத் தொடரின் முதல் நிகழ்வு, ஒலிப் பதிவு: பிரபாகர் நடராசா