ஒலிச் சேகரம்

சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் நினைவு ஆய்வரங்கு
சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக ஆய்வரங்கு 2016-10-15 அன்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வின் காலை அமர்வின் ஒலிப்பதிவு இதுவாகும். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டமும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் சி. கா. செந்திவேல் அவர்களும் சமகால சாதிய சமூகத்தில் நிலம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் அகிலன் கதிர்காமர் அவர்களும் உரையாற்றினர்.
உலகம் பலவிதம் நூல் அறிமுகம் (யாழ்ப்பாணம்)
உலகம் பலவிதம் நூலின் யாழ்ப்பாண அறிமுக நிகழ்வு. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
தமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் இரண்டாவது நினைவுப் பேருரையை திருச்சி கலாநிதி அமுதன் அடிகள் நிகழ்த்தினார். கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் (360, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இந்நிகழ்வு இடம்பெற்றது.
புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு நிகழ்வு
ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவல் தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் 2018-07-07 மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் தலைமை அ. யேசுராசா. வெளியீட்டுரை தி. செல்வமனோகரன், மதிப்பீட்டுரைகள் கை. சரவணன், ந. குகபரன்
வடக்கின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தலும் ஆறுமுகம் திட்டத்தைத் துரித கதியில் நடைமுறைப்படுத்தலும்
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் நடைபெற்ற “வடக்கின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தலும் ஆறுமுகம் திட்டத்தைத் துரித கதியில் நடைமுறைப்படுத்தலும்” என்ற கருத்தமர்வின் ஒலிப்பதிவு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு நூற்றாண்டு வரலாறு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டு கால விவரண ஒலித்தொகுப்பு, மூலம்:
இந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி "இந்துக்களின் போர்" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:
மாடு வளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்
இயற்கை விவசாயம் மாடு வளர்ப்பு முறை, பராமரிப்பு, உணவு வழிமுறைகள், திருநெல்வேலி முருகன் வீதியில் அமைந்துள்ள மாட்டுப் பண்ணையில் இயற்கை வழி இயக்க கலந்துரையாடல் இடம்பெற்றது. மாடு வளர்ப்பு முறைமையின் அடிப்படை நுட்பங்கள் புதுக்குடியிருப்பு செல்வபாக்கியம் பண்ணையின் உரிமையாளர் நேசன் அவர்களால் கலந்துரையாடப்பட்டது., மூலம்: