ஒலிச் சேகரம்

Pages

தமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் இரண்டாவது நினைவுப் பேருரையை திருச்சி கலாநிதி அமுதன் அடிகள் நிகழ்த்தினார். கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் (360, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இந்நிகழ்வு இடம்பெற்றது.
தி. செல்வமனோகரன் அவர்களின் 3 நூல்கள் வெளியீடு
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற திரு தி. செல்வமனோகரன் அவர்களின் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள். திரு சோ. பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியீட்டுரையை திரு தெ. மதுசூதனன் அவர்கள் நிகழ்த்தினார்கள். "காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்" என்ற நூல் பற்றி திரு சி. ரமணராஜாவும், “சொற்களால் அமையும் உலகு" என்ற நூல் பற்றி திரு இ. சு. முரளிதரன் அவர்களும், “தமிழில் மெய்யியல்" என்ற நூல் பற்றி திரு ச. முகுந்தன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள். தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஏற்புரையை, மூன்று நூல்களினதும் நூலாசிரியர் திரு தி. செல்வமனோகரன் அவர்கள் வழங்க, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது
சுரோடிங்கரின் பூனை நூல் வெளியீடு
ஜீவநதி பதிப்பகத்தின் 100ஆவது நூலாக வெளியான இ. சு. முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை வெளியீட்டு நிகழ்வின் ஒலிப்பதிவு
புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு நிகழ்வு
ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவல் தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் 2018-07-07 மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் தலைமை அ. யேசுராசா. வெளியீட்டுரை தி. செல்வமனோகரன், மதிப்பீட்டுரைகள் கை. சரவணன், ந. குகபரன்
இரணைமடு வெள்ள அனர்த்தம் 2018 தொடர்பான கலந்துரையாடல்
2018 டிசம்பரில் பெருமழை நேரத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்., மூலம்:
தலவாசல் சஞ்சிகை வெளியீடு
மூலம்: பிரபாகர், நடராசா
புளியம்பூ கவி நூல் வெளியீட்டு விழா
மூலம்: பிரபாகர், நடராசா

Pages