ஒலிச் சேகரம்

மாணிக்க தீபம் மணித் தமிழ் ஈழம்
பாடல் வரிகள் : முகில் வண்ணன் பாடியவர்: சத்தியமூர்த்தி, மாணிக்கம் இசை:யாழ் சீலன் , மாணிக்க தீபம் மணித் தமிழ் ஈழம் இனித் துயர் எனக்கேது அன்பே இனித் துயர் எனக்கேது சதையினை கிழித்தான் நரம்பினை விரித்தேன் சுதந்திர சுரம் மீட்டேன் - யாழ் சுகராகம் அதில் கேட்டேன் அற்புதக் கவசம் அவள் உடல் வாசம் (2) பொற்புடைத் தமிழ் ஈழம் - அவள் புன்னகை இனி வெல்லும் ( மாணிக்க தீபம் ) நெருப்புக்குள் வாடி நிதம் போராடி கருப்பையில் உருவானாள் - அவள் கற்பகத் தருவானாள் ஆடி நீர் ஊற்றில் ஆடிய நதியில் (2) தேவி நீர் ஆடி நின்றாள் - அவள் தேசியம் தனைக் காத்தாள் ( மாணிக்க தீபம் )