அஞ்சலியல் என்பது அஞ்சல் தலைகள், அஞ்சல் முறைமைகள், வரலாறுகள் அவற்றுடன் தொடர்புடைய அஞ்சல் எழுது பொருட்கள், அஞ்சல் குறிகள் போன்றவற்றின் சேகரிப்பு, ஆய்வு தொடர்பான துறையாகும். அஞ்சலியல் ஆவணங்கள் ஒரு சமூகத்தின் தொட்டுணரக்கூடிய (tangible), காண்பிய வரலாற்று (visual/ pictorial history) ஆவணங்களாக விளங்குகின்றன.
இச்சேகரம் இலங்கையின் காலனித்துவ, பின்காலனித்துவ காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் நாடுகடந்த தமிழ் வணிக பரிமாற்ற அஞ்சலியல் ஆவணங்களைக் கொண்டுள்ளது.