சேகரங்கள்

ஒலிச் சேகரம்
ஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.
ஒலி நூல்கள்
இது ஒலிநூற்கள் முன்னோடித் திட்டத்தின் சேகரம்.
குறுங்கால ஆவணங்கள்
அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது
எண்ணிம எழுத்தாவணங்கள்
பி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்
தனிநபர் சேகரங்கள்
பல்வேறு ஆளுமைகளின் தனிப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், புகைப்படங்கள். ஒலிக் கோப்புக்கள், நிகழ்படக் கோப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட ஆவணங்களும் தொகுக்கப்படுகின்றன. நீங்களும் பங்களிக்கலாம்.
காணொளிகள் சேகரம்
ஈழத்தின் குறும்படங்கள், ஆவணப்படங்கள், காணொளிப் பாடல்கள், திரைப்படங்களையும் ஏனைய நிகழ்படக் கோப்புக்களையும் ஆவணப்படுத்தும் முயற்சி. ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவற்றின் நிகழ்படக் கோப்புக்களை உருவாக்கியும் சேகரித்தும் வருகிறோம். நீங்களும் பங்களிக்கலாம்.
படங்கள் சேகரம்
இலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
செய்திக் கட்டுரைகள்
செய்திக் கட்டுரைகள்
தமிழ் நிகழ்த்துகைகள்
தமிழ் நிகழ்த்துகைகள் (slides/power point presentations), ஈழத் தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடைய நிகழ்த்துகைகள் தமிழ் நிகழ்த்துகைகள் சேகரத்தில் தொகுக்கப்படுகின்றன. நிகழ்த்துகைகளை படைப்பாக்கப் பொதுமங்கள் (https://creativecommons.org/licenses/by-sa/4.0/) உரிமைகளில் வெளியிட ஊக்குவிக்கிறோம். நிகழ்த்துகைகள் கட்டற்ற ODP கோப்பு வடிவத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இதனைப் பார்க்க நீங்கள் கட்டற்ற மென்பொருளானான libreoffice.org ஐ தரவிறக்கிப் பயன்படுத்தலாம். மாற்றாக Google Drive இலும் இந்தக் கோப்புக்களை import செய்து பயன்படுத்தலாம்.
கையெழுத்து ஆவணங்கள்
ஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.
கல்வி வளங்கள்
பாடசாலை மாணவருக்கான கல்வி வளங்களின் தொகுப்பு. கடந்த கால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் இப்பொழுது தொகுக்கப்படுகின்றன.
நூற்பட்டியல்
நூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.